Theme Check

வேளாண் பட்ஜெட்: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் நிதியுதவி !

வேளாண் பட்ஜெட்: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் நிதியுதவி !

வேளாண் பட்ஜெட்: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் நிதியுதவி !
X

தமிழகத்தின் 2022-23ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதனையடுத்து, இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

அதில் முக்கியமானதாக கருதப்படுவதில் ஒன்றாக, இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்குவதற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

mrk pannirselvam

அதாவது, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022- 23ஆம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23ஆம் ஆண்டிலும் வழங்கப்படும், என அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it