விமான நிலைய பணிப்பெண் தற்கொலை.. வீட்டுக்கு வராத காதலன் கைது..!
விமான நிலைய பணிப்பெண் தற்கொலை.. வீட்டுக்கு வராத காதலன் கைது..!

சென்னை, குரோம்பேட்டை லட்சுமிபுரம் முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் மதுரையை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவர், சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வரவேற்பாளராக இரண்டு வருடங்களாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தாம்பரத்தை சேர்ந்த லோகேஷ் என்பவரை கடந்த 18 மாதங்களாக இவர் காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரியதர்ஷினி தன்னுடைய வீட்டிற்கு வருமாறு லோகேஷை அழைத்துள்ளார். அதற்கு அவர், தனக்கு வேலை இருப்பதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
லோகேஷுக்கு மீண்டும் போன் செய்த பிரியதர்ஷினி, உடனே வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு தற்கொலை செய்வது போல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காதலன் உடனே விரைந்து சென்று பிரியதர்ஷினி வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

வெகு நேரமாக கதவு திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பிரியதர்ஷினி உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதைப் பார்த்ததும் லோகேஷ் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரியதர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காதலன் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

