Theme Check

அஜித் பட பாணியில் திருட்டு… அதிரடி காட்டிய போலீஸ்!!

அஜித் பட பாணியில் திருட்டு… அதிரடி காட்டிய போலீஸ்!!

அஜித் பட பாணியில் திருட்டு… அதிரடி காட்டிய போலீஸ்!!
X

சேலத்தில் வலிமை திரைப்பட பாணியில் செயின் பறிப்பு மற்றும் வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் தேதி சேலம் குகை பகுதியில் நடந்து சென்ற பத்மாவதி என்ற 73 வயது மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச்சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.

chain-snatching

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள ஈரானியன் எனும் கும்பலை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிவந்தது.

இதனையடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் அங்கு சென்று முகாமிட்ட போலீஸார் அங்கிருந்து சேலத்திற்கு கைவரிசை காட்ட வந்த முகமது ஆசிப் அலி மற்றும் ஷபிஷேக் ஆகிய இரண்டு இளைஞர்களை அதிரடியாக கைது செய்தனர்.

arrest

கைது செய்யப்பட்டுள்ள முகமது ஆசிப் அலி மற்றும் ஷபிஷேக் ஆகியோர் மீது சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, உள்ளிட்ட பல இடங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு பேரை கைது செய்துள்ள சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் முக்கிய குற்றவாளியான சல்மான் கான் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it