Theme Check

அஜித், சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை..? - டி. ராஜேந்தர் விளக்கம் !!

அஜித், சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை..? - டி. ராஜேந்தர் விளக்கம் !!

அஜித், சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை..? - டி. ராஜேந்தர் விளக்கம் !!
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் சென்னை தி.நகரில் உள்ள 117 வது வார்டில் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்தர், நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
”சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் தனியார் விளம்பர படபிடிப்பின் காரணமாக மும்பையில் உள்ளதால் வாக்கு செலுத்த இயலவில்லை.

rajenthar

இருந்தபோதிலும் நான் தொடர்பு கொண்டு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினேன். ஒரு வாக்கும் வீணடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தேன். எனினும் வர இயலாத சூழ்நிலை.

அதுபோல, நடிகர் அஜித் இத்தனை தேர்தலில் வாக்களித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு கொரோனோ என்ற நோய் ஒன்றே காரணம். இல்லையென்றால் இத்தனை தேர்தலுக்கு வாக்களிக்க வந்தவர் இப்போது வராமல் இருப்பாரா நாட்டுல சூழ்நிலை சரியில்ல சார் . ஏன் பொங்கலன்று அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வெளியாகவில்லை. எல்லாத்துக்கும் இந்த நோய் மட்டுமே காரணம். இந்த நோயை வைத்து சினிமாக்காரர்களை பயமுறுத்துகிறார்கள், என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it