மாஸ் காட்டும் அஜித்தின் புதிய லுக் ரிலீஸ்!!
மாஸ் காட்டும் அஜித்தின் புதிய லுக் ரிலீஸ்!!

அடுத்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராக உள்ள படத்தில் அஜித்தின் புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் (AK 61) நடிக்க உள்ளார்.
அது இருவரும் மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைக்கும் படம். இந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க இருக்கிறார்.இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், வரும் மார்ச் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதற்காக சென்னை அண்ணாசாலை போன்ற செட் ஒன்று ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் அதில் ஒரு வேடத்தில் மங்காத்தா படம் போன்று வில்லன் வேடம் என்றும் கூறப்படுகிறது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK
— Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022
அதில், அஜித் வெள்ளை தாடியுடன் வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in

