ஜியோ நிறுவனத் தலைவரானார் ஆகாஷ் அம்பானி!!
ஜியோ நிறுவனத் தலைவரானார் ஆகாஷ் அம்பானி!!

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோவின் இயக்குநராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை 5 ஆண்டு காலத்திற்கு நியமிப்பதற்கும் இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சவுத்ரி, ஆகியோர் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக பொறுப்பேற்றார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உட்பட அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளையும் வைத்திருக்கும் முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.