மக்களே உஷார்.. இன்று முதல் அமல்!!
மக்களே உஷார்.. இன்று முதல் அமல்!!

இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை பெருநகர பகுதிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர்.
2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்தது.
ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது. உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய ஹெல்மெட் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 312 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in

