Theme Check

அலர்ட்! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

அலர்ட்! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

அலர்ட்! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!
X

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Sea Rough

இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 3 முதல் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

newstm.in

Next Story
Share it