அரசு ஊழியர் குழந்தைகளுக்கு உதவித்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு..!
அரசு ஊழியர் குழந்தைகளுக்கு உதவித்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் அகவிலைப்படி பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சிறப்பான சலுகையை அரசு அறிவித்துள்ளது. அத்துடன், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
இந்த உதவித்தொகையை பெற விரும்புவோர் வருகிற மார்ச் 31ம் தேதி வரை கோரிக்கை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அத்துடன் பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மேலும், விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,250 வரை வழங்கப்படுகிறது. மேலும், ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலும் இருவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இரு குழந்தைகளுக்கும் மொத்தம் 4500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
அத்துடன், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருப்பின் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் குழந்தைகளுக்கான உதவித்தொகையை பெறுவதற்கு உரிமை கோர முடியவில்லை.
கடந்த 2020-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உரிமை கோராத மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இது தொடர்பாக உரிமை கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கால அவகாசம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உரிமை கோராதவர்கள் விரைவாக உரிமை கோருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு, குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்கள், ரிப்போர்ட் கார்டு, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

