Theme Check

‘அம்பாசமுத்திரம் அம்பானி’நாயகி ஜாமீனை ரத்து செய்ய மேல் முறையீடு..!!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’நாயகி ஜாமீனை ரத்து செய்ய மேல் முறையீடு..!!

‘அம்பாசமுத்திரம் அம்பானி’நாயகி ஜாமீனை ரத்து செய்ய மேல் முறையீடு..!!
X

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் நாயகியாக நடித்தவர் நவ்னீத் கவுர் ராணா. ரவி ராணாவை திருமணம் செய்த நவ்னீத், சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவ்நீத் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவரது கணவர் ரவியும் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். எம்.பி. எம்.எல் ஏவாக உள்ள மனைவியும் கணவனும் மராட்டியத்தில் ஆளும் கட்சியான சிவசேனாவுக்கு தொடர்ந்து தங்களது போராட்டங்கள் மூலம் குடைச்சல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு மக்களின் துன்பங்கள் நீங்க அனுமன் சலீசா எனப்படும் அனுமன் மந்திரம் பாடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில ரானா தம்பதிகள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு கடந்த மே 4-ந் தேதி தம்பதிக்கு பல்வேறு நிபத்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஊடகங்களில் பேசக்கூடாது, இதுபோன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நவ்நீத் ரானா, உத்தவ் தாக்கரேவை தன்னுடன் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுத்தார். இந்நிலையில் கார் காவல் நிலையம் சார்பில், சிறப்பு நீதிமன்றத்தில் எம்.பி. நவ்நீத் ரானாவின், கணவர் ரவி ரானாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கூறி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது, “குற்றம் வாட்டப்பட்ட எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ. ரவி ரானா இருவரும் விடுதலையானவுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியபோது சிறப்பு நீதிமன்றம் விதித்த நிபந்தனையை அவர்கள் மீறியுள்ளனர். இதன்காரணமாக அவர்களின் ஜாமீனை கேர்ட்டு ரத்து செய்வதுடன், அவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். அவர்களை உடனடியாக காவலில் எடுக்க ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்

Tags:
Next Story
Share it