Theme Check

ஆம்புலன்ஸ் டிரைவர் தீக்குளிக்க முயற்சி.. சுகாதாரத்துறை அலுவலகத்தில் பரபரப்பு..!

ஆம்புலன்ஸ் டிரைவர் தீக்குளிக்க முயற்சி.. சுகாதாரத்துறை அலுவலகத்தில் பரபரப்பு..!

ஆம்புலன்ஸ் டிரைவர் தீக்குளிக்க முயற்சி.. சுகாதாரத்துறை அலுவலகத்தில் பரபரப்பு..!
X

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை ஆம்புலன்ஸ்களில் 42 டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்து தங்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா என்பவர் இன்று சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, இயக்குநர் ஸ்ரீராமுலு அலுவலகம் வந்த நிலையில், அவருடைய கார் முன்பு ராஜா அமர்ந்து சம்பளம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

திடீரென, தான் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அதன் பின்னர் அதிகாரிகள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் சுகாதாரத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
Share it