Theme Check

பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மாணவி துடிதுடித்து பலி..!!

பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மாணவி துடிதுடித்து பலி..!!

பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மாணவி துடிதுடித்து பலி..!!
X

சத்தீஸ்கர் மாநிலம் பேமேதேரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி திவ்யா மன்டாவி. இவர் பாந்தி என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்குள்ள பள்ளி மைதானத்தில் தனது நண்பர்களுடன் சிறுமி திவ்யா விளையாடிக் கொண்டிருந்தார்.

scorpion

அப்போது அங்கிருந்த தேள் ஒன்று மாணவியை எதிர்பாராத விதமாக கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு தாதி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால், மேல் சிகிச்சைக்காக பேமதேரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டபோதும் சிறுமியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைபடி, தலைநகர் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சிறுமியை ஆம்புலன்சில் அழைத்து செல்லும்போது சிறுமி திவ்யா உயிரிழந்துள்ளார்.

Dead-body

இந்த சம்பவத்திற்கு மாநில முதல்வர் பூபேஷ் பகேல் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கு உடனடியாக ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it