Theme Check

பொதுத்தேர்வு எழுதாத 6.5 லட்சம் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!

பொதுத்தேர்வு எழுதாத 6.5 லட்சம் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!

பொதுத்தேர்வு எழுதாத 6.5 லட்சம் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!!
X

தமிழகத்தில் கடந்த மாதம் 5ம் தேதி முதல் தொடங்கப்பட்ட 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 31ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் தேர்ச்சியின்றி ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் நேரடி பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதி உள்ளனர்.

exam

இது குறித்த பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வை 1 லட்சத்து 95 ஆயிரத்து 292 மாணவர்கள் எழுதவில்லை. மேலும் பிளஸ்1 பொதுத்தேர்வை 2 லட்சத்து 58 ஆயிரத்து 641 மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 லட்சத்து 25 ஆயிரத்து 534 மாணவர்களும் எழுதவில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்கள்” என்று பள்ளிகல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 லட்ச மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12-exam

அதில் பொதுத்தேர்வுகள் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளநிலையில், அதைத் தொடர்ந்து வருகிற ஜூலை மாதத்தில் தேர்வு எழுதத்தவறிய 6.5 லட்சம் மாணவர்களையும் தேர்வெழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வுளில் பங்கேற்க செய்யும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it