Theme Check

மனைவி திட்டியதால் கோபம்.. இளம் கணவர் எடுத்த விபரீத முடிவால் பெரும் சோகம்

மனைவி திட்டியதால் கோபம்.. இளம் கணவர் எடுத்த விபரீத முடிவால் பெரும் சோகம்

மனைவி திட்டியதால் கோபம்.. இளம் கணவர் எடுத்த விபரீத முடிவால் பெரும் சோகம்
X

கணவன்- மனைவி இடையே ஏற்படும் சிறுசிறு சண்டைகள், வாக்குவாதத்திற்கே தவறான முடிவை எடுக்கும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அப்படியொரு சம்பவம் சென்னையில் நடந்து ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அடுத்த சோகண்டி பகுதியில் கிருஷ்ணா (22) என்ற இளைஞன் வசித்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தனது மனைவி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இளைஞன் கிருஷ்ணா உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியுடன் சோகண்டி பகுதியில் வசித்து வந்தார். கணவன்- மனைவி சந்தோஷாக வாழ்த்து வந்தனர். இருவருக்கும் சிறு வயது என்பதால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டாலும் சமாதானம் அடைந்து வந்தனர்.

cellphone

இந்த நிலையில், நேற்று முன் தினம் கிருஷ்ணா தனது செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை அவரது மனைவி கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அப்போது கணவனை ஆவேசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மனைவி வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் கிருஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். பின்னர் வீடு திரும்பியதும் கிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்ட மனைவி அதிர்ச்சியில் அலறியிருக்கிறார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிருஷ்ணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிருஷ்ணாவின் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

newstm.in

Next Story
Share it