பாஜக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!
பாஜக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாஜக கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது.
அதன்படி குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு இன்று கூடியது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட அறிவிப்பில், " பாஜக கூட்டணியின் சார்பாக ஜெகதீப் தங்கர் குடியரசு துணை தலைவராக போட்டியிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டது. ஜெகதீப் தங்கார் தற்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

