மன்னிப்பு கேட்ட ஃப்ளிப்கார்ட்!! எதற்கு தெரியுமா ?
மன்னிப்பு கேட்ட ஃப்ளிப்கார்ட்!! எதற்கு தெரியுமா ?

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உலக மகளிர் தினத்திற்கு சமையல் பொருட்களை ஊக்குவிப்பது போன்ற விளம்பரங்களை வெளிட்ட பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்காட் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மகளிர் தினமான நேற்று முன்தினம் பிளிப்காட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், மதிபிற்குரிய வாடிக்கையாளர்களே இந்த பெண்கள் தினத்தில் உங்களை கொண்டாடுவோம். சமையல் பாத்திர பொருட்களை ரூ. 299 முதல் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தது. மேலும், தங்கள் வர்த்தக தளத்திலும் இதுபோன்ற செய்தியையே பிளிப்காட் வெளியிட்டிருந்தது.
It's offensive
— Harmeet Kaur (@iamharmeetK) March 8, 2022
Why women are being identified with kitchen appliance..only ??
Whole world is ours & certainly kitchen is not our whole world!!
No thanks!!
இதனை தொடர்ந்து பெண்கள் தினத்தில் சமையல் தொடர்பான விற்பனையை ஊக்குவித்த பிளிப்காட்டிற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதனால், தனது செயலுக்கு பிளிப்காட் மன்னிப்புக்கோரியுள்ளது.
We messed up and we are sorry.
— Flipkart (@Flipkart) March 8, 2022
We did not intend to hurt anyone's sentiments and apologise for the Women's Day message shared earlier. pic.twitter.com/Gji4WAumQG

