மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, மீண்டும் அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.
அதன்படி, அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7500 ரூபாய் வழங்கவும் தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 7500 ரூபாய் மதிப்பூதியம் போதாது எனக் கூறி தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் அரசின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.
அரசின் புதிய கொள்கைகளில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படு.
மேலும், அரசின் புதிய முடிவுக்கு உடன் படும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது’ என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

