Theme Check

திட்டமிடப்பட்டி பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!

திட்டமிடப்பட்டி பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!

திட்டமிடப்பட்டி பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!
X

தமிழகத்தில் பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் 167 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அது தவிர 40 மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறினார்.

anbil

தமிழ்நாட்டில் கல்வி துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடத்தி வருகிறோம் என்று கூறிய அவர், மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

anbil

அதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம் என்று கூறினார். மேலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத வைக்க அனைத்து முயற்சிகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it