Theme Check

நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்!!

நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்!!

நீங்கள் ஓய்வூதியம் பெறுபவரா? வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்!!
X

பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாதாந்திர ஓய்வூதிய திட்டம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், வரும் 25-ம் தேதிக்குள் தங்களுடைய ஆண்டு அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக கடந்த 17-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் வங்கி மூலம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், 43 ஆயிரத்து 774 பேர் தங்களின் சரியான விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் பயனாளர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

எனவே வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய பொது சேவை மையங்கள் மூலம் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யலாம்.

உங்கள் அருகிலுள்ள பொது இ-சேவை மையத்தை கண்டறிய https://findmycsc.nic.in/ என்ற இணையத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

Tags:
Next Story
Share it