நீங்க எஸ்பிஐ கஸ்டமரா..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
நீங்க எஸ்பிஐ கஸ்டமரா..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர் உள்ளனர். எனவே, எஸ்பிஐ வங்கி எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொண்டாலும் அது நேரடியாக பல கோடி மக்களை பாதிக்கிறது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, பராமரிப்பு பணி காரணமாக எஸ்பிஐ வங்கியின் crcf.sbi.co.in என்ற இணையதளம் இன்று (26-ம் தேதி) இரவு 11 மணி முதல் நாளை (27-ம் தேதி) காலை 6 மணி வரை செயல்படாது.
இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் எவ்வித வங்கி சேவையையும் இணையதளத்தில் பயன்படுத்த முடியாது. இருப்பினும், இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை 1800112211 / 18001234 / 18002100 என்ற இலவச எண்களில் தெரிவிக்கலாம்’ என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
Next Story

