சத்தீஸ்கரில் நக்சல்கள் கண்ணி வெடி தாக்குதல்- ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம்..!!
சத்தீஸ்கரில் நக்சல்கள் கண்ணி வெடி தாக்குதல்- ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம்..!!

சத்தீஸ்கர், மார்ச். 14- சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவர்கள் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மற்றும் தங்களுக்கு எதிராக உள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் தோன்றிபேடா மற்றும் சோனாப்பூர் பகுதியில் சாலை அமைக்கு பணியை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர். அப்போது நக்சல்கள் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடி பயங்கரமாக வெடித்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மேலும் ஒரு ஜவான் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story

