Theme Check

வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையால் மக்களை மகிழ்வித்த கலைஞர்கள்..!!

வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையால் மக்களை மகிழ்வித்த கலைஞர்கள்..!!

வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையால் மக்களை மகிழ்வித்த கலைஞர்கள்..!!
X

மஹாசிவராத்திரியையொட்டி ஈஷாவில் நடந்து வரும்யக்ஷாகலை திருவிழாவின் 2-ம் நாளான இன்று (மார்ச் 3) புகழ்பெற்ற இசை கலைஞர்கள் தங்களின் இன்னிசையால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சர்வதேச அளவில் அறியப்படும் வயலின் மாஸ்ட்ரோ டாக்டர். மைசூர் மஞ்சுநாத் அவர்களின் மகன் திரு. சுமந்த் மஞ்சுநாத் தன் இனிய வயலின் இசையால் மக்களின் மனங்களை தன் வசப்படுத்தினார். 10 வயது முதல் வயலின் இசைக்க தொடங்கிய அவர் இந்திய தூதரகத்தின் சார்பில் அபுதாபியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலை நிகழ்ச்சியில் வயலின் இசைத்த பெருமைக்குரியவர். அவருடன் 6 வயதில் இருந்து புல்லாங்குழல் வாசிக்கும் இசை கலைஞர் திரு.ரிஷிகேஷ் மஜூம்தாரும் இணைந்து மெல்லிசையால் சிறந்த இசை விருந்து படைத்தனர்.

1

அவர்களுடன், இசை கருவிகளில் கைதேர்ந்த திரு. ஜெயந்திர ராவ் அவர்கள் மிருதங்கமும், திரு.ராஜேந்திர நாகோட் தபேலாவும், திரு. வாழப்பள்ளி கிருஷ்ணகுமார் கடமும் வாசித்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இந்த இசை கலைஞர்கள் அனைவரும் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, துபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் தங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சிறப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யக்ஷா திருவிழாவின் நிறைவு நாளான நாளை (மார்ச் 4) புன்யா டான்ஸ் கம்பெனியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.

Next Story
Share it