Theme Check

இந்து அமைப்பின் நி்ர்வாகி கொலை… தொடரும் பதற்றம்!!

இந்து அமைப்பின் நி்ர்வாகி கொலை… தொடரும் பதற்றம்!!

இந்து அமைப்பின் நி்ர்வாகி கொலை… தொடரும் பதற்றம்!!
X

கர்நாடகாவில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, ஷிவமொக்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

bagranj dal

பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து இந்தக் கொலை நடந்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

இதனால் இருதரப்பு மக்களிடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. ஹர்ஷா கொலையை கண்டித்து ஷிமோகாவில் பல்வேறு பகுதிகளில் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

bagranj dal

அதனைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பதற்றம் குறையாததால், அங்குள்ள பள்ளிகளை வரும் 24ஆம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it