20 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்!!
20 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்!!

சென்னையில் 20 பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறை தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் ஏராளமாக நடக்கின்றன.
டெல்லியில் நிர்பயா வழக்கு போன்று வட மாநிலங்களில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறைவு தான் என்றாலும் கூட அங்குமிங்கும் அவ்வப்போது தொடர்ந்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் 20 பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மசித் சைத் என்கிற இளைஞரை கைது செய்து சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் 20 பெண்களிடம் பழகி ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக மசித் சைத் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மசித் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
newstm.in

