உ.பி.யில் கொடூரம்.. 75 வயது மூதாட்டியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் !!
உ.பி.யில் கொடூரம்.. 75 வயது மூதாட்டியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் !!

இரவில் அதிக வெட்கையால் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 75 வயதுடைய மூதாட்டி, தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை திடீரென தூக்கிக் கொண்டு அருகிலுள்ள வயல்வெளிக்கு கொண்டு சென்றார்.
பின் அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான். அடுத்த நாள் காலையில் வயல்வெளியில் நிர்வாண நிலையில் மூதாட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனே அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களே இணைந்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
குடிபோதையில் தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றவாளி ஒப்புக் கொண்டான். அவனது ரத்தக்கறை படிந்த ஆடைகள், ஆதாரமாக மீட்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.
newstm.in

