Theme Check

கடன் பெற்றவரின் தந்தை மீது தாக்குதல்.. தனியார் நிதி நிறுவன கும்பல் கொடூரச்செயல் !!

கடன் பெற்றவரின் தந்தை மீது தாக்குதல்.. தனியார் நிதி நிறுவன கும்பல் கொடூரச்செயல் !!

கடன் பெற்றவரின் தந்தை மீது தாக்குதல்.. தனியார் நிதி நிறுவன கும்பல் கொடூரச்செயல் !!
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (35), வீரன் (48), யாசர் அராபத் (25) ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் தாராபுரம், கே.எஸ்.கே.நகரை சேர்ந்த அருண்குமார் (36) தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளார். அதாவது, வாடகை வாகனங்கள் வாங்குவதற்காக கடன் பெற்றுள்ளார். அதன்பின்னர் கடன் தவணையையும் முறையாக திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பேருந்து ஒன்றை விற்பனை செய்து அருண்குமார் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டார். ஆனாலும் மேலும் தவணை பாக்கி இருப்பதாக கூறி 3 வாகனங்களை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடனை திருப்பி செலுத்த கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்துள்ளனர்.

fd

இந்த நிலையில் மீண்டும் தவணை தொகையை கேட்டு நிதி நிறுவனத்தினர் அருண்குமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த அருண் குமாரின் தந்தையை அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, வீரன் (48), யாசர் அராபத் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it