வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்..!!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்..!!

3 வேளாண் சட்டங்களை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்.
விவசாய சங்கத் தலைவர் என்ற போர்வையில் இவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும், இவர் பணம் கேட்டு பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிப்பதற்காக பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அப்போது, அவர் முகத்தின் மீது ஒரு சிலர் கருப்பு மை வீசினர். இதனால், இரு தரப்பினரக்கு இடையே மோதல் ஏற்பட்டு, நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகேஷ் திகாயத் பேசியதாவது, பத்திரிகையாளர் சந்திப்பிற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததை சுட்டிக்காட்டிய அவர், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜகவின் சதியே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டினார்.

முன்னதாக, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பொதுகூட்டத்தில், பாஜக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து வைக்கோல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை காவல்நிலையங்களில் கட்டுவார்கள் என அவர் எச்சரித்தார்.
பெங்களூருவில் விவசய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

