Theme Check

விரட்டி விரட்டி கொல்ல முயற்சி.. சொத்துக்காக தந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டிய மகன்கள்!!

விரட்டி விரட்டி கொல்ல முயற்சி.. சொத்துக்காக தந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டிய மகன்கள்!!

விரட்டி விரட்டி கொல்ல முயற்சி.. சொத்துக்காக தந்தையை கொல்ல சதி திட்டம் தீட்டிய மகன்கள்!!
X

விழுப்புரம் நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் அகமது. மேலும், விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஒப்பந்தகாரராக பணி செய்து வந்த நிலையில், பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சொத்து பிரச்சினை காரணமாக அகமதுவுடன், அவரின் மகன்கள் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதையடுத்து இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.

அதன்பின், சிகிச்சை முடிந்து காலை 4 மணிக்கு விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர். அதனால் அதிர்ச்சியடைந்த அவர் நகர பகுதிக்குள் நுழைந்தபோது, அங்கு ஒரு கும்பல் தாக்க முயன்றுள்ளது.

இதனால் பதற்றமான அவர், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். அப்போது சிந்தாமணி என்ற இடத்தில் காரை மறித்த மர்ம கும்பல், காரிலிருந்து இறங்கி ஓடிய அகமதுவை கொலை செய்ய முயன்றனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அகமதுவை அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அகமது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், அகமதுவிடம் விசாரணை நடத்தி, அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில், ‘குடும்ப பிரச்சினை காரணமாக எனது மகன்கள் என்னைத் திட்டமிட்டு, கொலை செய்ய முயன்றுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

சொத்து பிரச்சினைக்காகத் தந்தையை மகன்களே கொலை செய்யத் துணிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story
Share it