மக்களே கவனம்..!! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!
மக்களே கவனம்..!! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்:
ஆகஸ்ட் 1, 2022 - திங்கள் - துருபகா ஷீ-ஜி திருவிழா - காங்டாக்
ஆகஸ்ட் 7, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8, 2022 - திங்கள் - மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 9, 2022 - செவ்வாய் - மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 11, 2022 - வியாழன் - ரக்க்ஷா பந்தன்
ஆகஸ்ட் 13, 2022 - 2 வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 14, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15, 2022 - திங்கள் - சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16, 2022 - செவ்வாய் - பார்சி புத்தாண்டு - மும்பை மற்றும் நாக்பூர்
ஆகஸ்ட் 18, 2022 - வியாழன் - ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 21, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 27, 2022 - 4 வது சனிக்கிழமை.
ஆகஸ்ட் 28, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 29, 2022 - திங்கள் - ஹர்தாலிகா தீஜ் - சட்டீஸ்கர் மற்றும் சிக்கிம்
ஆகஸ்ட் 31, 2022 - புதன் - விநாயகர் சதுர்த்தி

