Theme Check

மக்களே கவனம்..!! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை செயல்படாது..!!

மக்களே கவனம்..!! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை செயல்படாது..!!

மக்களே கவனம்..!! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை செயல்படாது..!!
X

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜூன் மாதம் 7 முதல் 9-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வருகிற ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

1
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'ஜூன் 10-ந் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.

Next Story
Share it