Theme Check

மக்களே கவனம்.. தமிழகம் முழுவதும் உஷார்.. கலெக்டர்களுக்கு கடிதம்..!

மக்களே கவனம்.. தமிழகம் முழுவதும் உஷார்.. கலெக்டர்களுக்கு கடிதம்..!

மக்களே கவனம்.. தமிழகம் முழுவதும் உஷார்.. கலெக்டர்களுக்கு கடிதம்..!
X

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஜிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தற்போது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் கடந்த மே 27-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு 15 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் 4-ம் தேதி பார்க்கும்போது 21 ஆயிரத்து 55 பேருக்கு தொற்று அதிகரித்துள்ளது.

அதே போல், தொற்று உறுதியாகும் சதவீதம் 0.52 ல் இருந்து 0.73 ஆக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மீண்டும் ஒரு கொரோனா பெருந்தொற்று ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பரிசோதனையை அதிகரித்தல், புதிய மரபணு மாற்ற தொற்றுக்கள் கண்டறியப்படுகிறதா என்பதை கண்காணித்தல், பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
Share it