#BREAKING:- மக்களே கவனம்.. டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் மருத்துவர் பலி..!
#BREAKING:- மக்களே கவனம்.. டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் மருத்துவர் பலி..!

புதுச்சேரி, மடுகரை வி.எஸ்.நகர் 3வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார் (60). இவருடைய மகள் தனுஷியா (25); பல் மருத்துவர்.
இவருடைய கணவர் ஸ்ரீராம் (28); ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் இருவரும் சென்னை அண்ணா நகரில் தங்கி, தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், தனுஷியா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இதையடுத்து, ஓய்வு எடுப்பதற்காக மடுகரையில் உள்ள தாய் வீட்டுக்கு நேற்று முன் தினம் மதியம் 2 மணிக்கு வந்தார்.
அப்போது, திடீரென தனுஷியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அன்று இரவு 8 மணி அளவில் மீண்டும் தனுஷியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதே மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தனுஷியாவிற்கு திடீரென ரத்த அணுக்கள் குறைந்ததால், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பருவம் தவறி திடீரென பெய்யும் மழையின் காரணமாக பல உடல்நல கோளாறுகள் ஏற்பட தொடங்கியுள்ள நிலையில், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பினும் மருத்துவரை நாடி பரிசோதனை செய்து உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

