Theme Check

தமிழ்நாடு வம்சாவளி பெண்ணை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் !

தமிழ்நாடு வம்சாவளி பெண்ணை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் !

தமிழ்நாடு வம்சாவளி பெண்ணை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் !
X

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை திருமணம் செய்து கொண்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி ஆட்டக்காரரான இவர் மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கக்கூடியவர். ஐ.பி.எல்.லில் ஆர்சிபி அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.

maxwell

இந்நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் திருமண அழைப்பு வெளியாகி பெரும் வைரலானது.

இதனைத்தொடர்ந்து, வினி ராமன் - மேக்ஸ்வெல் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸ்வெல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், காதல் என்பது நிறைவுக்கான தேடல். இப்போது எனக்கு நிறைவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
maxwell
அதே போல வினி ராமனும் கணவர் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொண்ட வினி ராமனின் பெற்றோர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினி ராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில்தான். அவர் மெல்போர்னில் மருந்தக பிரிவில் படிப்பை முடித்துள்ளார். வினி ராமன் - மேக்ஸ்வெல் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it