Theme Check

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!
X

தமிழக அரசுப் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை நடத்தும் வகையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, திமுக தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் தமிழக பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா தலைமையில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 24-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில், ‘கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்’ என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று பேச்சு நடத்துகின்றனர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் என பகுதி நேர ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Next Story
Share it