Theme Check

ஆட்டோ ஓட்டும் இளைஞர் காவலர் தேர்வில் அசத்தல்.. குவியும் பாராட்டு..!

ஆட்டோ ஓட்டும் இளைஞர் காவலர் தேர்வில் அசத்தல்.. குவியும் பாராட்டு..!

ஆட்டோ ஓட்டும் இளைஞர் காவலர் தேர்வில் அசத்தல்.. குவியும் பாராட்டு..!
X

புதுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் கந்தன் (31). இவருக்கு, சிறு வயது முதலே போலீசாக ஆக வேண்டும் என்ற ஆசை. ஆனால், குடும்ப வறுமை காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டிக் கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு, எழுத்து தேர்வுக்கும் தயாரானார்.

பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதி தேர்வில் தேர்வான அவர், சமீபத்தில் நடந்த எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கந்தனுக்கு திருமணமாகி, ஒரு வயதில் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விடா முயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story
Share it