சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி நிற்காமல் சென்ற ஆட்டோ!
சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி நிற்காமல் சென்ற ஆட்டோ!

சென்னையில், வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (5-ம் தேதி), சென்னை போரூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் என்பவரை இடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றது. இதில் காயமடைந்த பொன்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
இந்நிலையில், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று காலை திடீரென சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, அவருக்கு ஆறுதல் கூறியதுடன், தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.

