Theme Check

நிஜத்தில் நடந்த காத்துவாக்குல் ரெண்டு காதல்..!! அப்போ கல்யாணம் ?

நிஜத்தில் நடந்த காத்துவாக்குல் ரெண்டு காதல்..!! அப்போ கல்யாணம் ?

நிஜத்தில் நடந்த காத்துவாக்குல் ரெண்டு காதல்..!! அப்போ கல்யாணம் ?
X

ஜார்க்கண்ட் மாநிலம் லோதர்டாஹா மாவட்டம் பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் ஓரான். இவரும் அதேபகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணும் 3 ஆண்டுகளாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு சந்தீப் ஓரான் சென்றுள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. ஓரான் மற்றும் குமாரியின் உறவை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Jarkhand

இதனால், கைகலப்பு ஏற்பட்ட நிலையில், இறுதியாக கிராம மக்கள் பஞ்சாயத்து செய்து வைத்தனர். இதில், ஓரான் இரு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். சந்தீப் ஓரானுக்கு ஏற்கெனவே திருமணமாகாமல் குழந்தை இருக்கிறது என்பதை அறிந்தும் ஸ்வாதி ஓரானை ஏற்றுக்கொண்டார்.

முதல் காதலி குசும் லக்ராவும் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும், கிராம மக்களின் முன்னிலையில் இரண்டு பெண்களின் சம்மதத்துடன் சந்தீப் ஓரான் திருமணம் செய்துக்கொண்டார்.

jarkhand

இதுகுறித்து சந்தீப் ஓரான் கூறுகையில், “ இரண்டு பெண்களை திருமணம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கிறது, ஆனால் நான் இருவரையும் காதலிக்கிறைன். அவர்களில் ஒருவரை விட்டுவிட முடியாது” என்று கூறினார்.

இதேபோல், கடந்த ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் கிராமத்தில் மணமகன் சந்து மௌரியா, ஹசீனா பாகேல் மற்றும் சுந்தரி காஷ்யப் ஆகியோரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார.

Tags:
Next Story
Share it