Theme Check

கிரிக்கெட்டில் அசத்தும் வாரிசு.. கெளதம் வாசுதேவ் மேனனுக்கு குவியும் பாராட்டு !!

கிரிக்கெட்டில் அசத்தும் வாரிசு.. கெளதம் வாசுதேவ் மேனனுக்கு குவியும் பாராட்டு !!

கிரிக்கெட்டில் அசத்தும் வாரிசு.. கெளதம் வாசுதேவ் மேனனுக்கு குவியும் பாராட்டு !!
X

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பிரபல இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் நெல்லை அணிக்காக முதன்முறையாக களமிறங்கினார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர், பௌலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். ஆர்யா யோஹன், மொத்தம் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் அவர் செய்தார்.

dsg

திரைநட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் ஆர்வம்காட்டி நடிப்பு அல்லது இயக்கம் என வலம் வருவர். இதில் வெற்றிபெறுவது சிலர் தான். ஆனால் தோல்வி அல்லது பெரியளவில் வெற்றிபெறாதவர்கள் என்றால் பெரும் பட்டியலை கொடுக்கலாம். அந்த வகையில் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் சினிமா பக்கம் இல்லாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார்.

தற்போது தமிழ்நாடு பிரீமியா் லீக் போட்டிகளில் கலக்கி வரும் இவர் , அடுத்ததாக ஐபிஎல், இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it