Theme Check

பரிதாபம்.. திருடனை துரத்திய ஆசிரியர்.. எமனாக வந்த ரயில்..!

பரிதாபம்.. திருடனை துரத்திய ஆசிரியர்.. எமனாக வந்த ரயில்..!

பரிதாபம்.. திருடனை துரத்திய ஆசிரியர்.. எமனாக வந்த ரயில்..!
X

மத்திய பிரதேச மாநிலம் ஷதோல் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா (54). இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று, பணி முடிந்து தனது சொந்த ஊரான சாகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

இரவு 7 மணி அளவில், அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தனது நண்பருக்கு அவசரமாக தகவல் ஒன்று தெரிவிக்க வேண்டும் என மனோஜ் நேமாவிடம் செல்போன் கேட்டுள்ளார். மனோஜ் நேமாவும் செல்போனை கொடுத்துள்ளார்.

அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர், ரயிலின் வேகம் சற்று குறையவே, செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளார். இதை பார்த்த மனோஜும் ரயிலில் இருந்து குதித்து அவரை துரத்திச் சென்றுள்ளார்.

அப்போது, அடுத்த தண்டவாளத்தில் வந்த ரயில் மனோஜ் நேமா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it