Theme Check

#BIG BREAKING:- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார்..!!

#BIG BREAKING:- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார்..!!

#BIG BREAKING:- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார்..!!
X

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஷேன் வார்னே, 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வார்னே, நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது வில்லாவில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின் ஸ்போர்ட்ஸ் பிரிவு தகவல் வெளியிட்டுளது.

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it