Theme Check

#BIG BREAKING:-ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்..!!

#BIG BREAKING:-ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்..!!

#BIG BREAKING:-ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்..!!
X

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார் . இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அவர் இந்நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர்.

இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது, மறைந்து இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த காயத்துடன் சுருண்டு விழுந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இதில் அபேவுக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் காலமானார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு, உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story
Share it