#BIG NEWS:- ஊழல் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!
#BIG NEWS:- ஊழல் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர் இந்த முடிவு மாற்றப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் நியூட்ரிசியன் கிட் தொகுப்பில் மீண்டும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார்.
மேலும் ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது சிஎம்டிஏ மாறியிருக்கிறது. பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களில் பெற்றது எப்படி ?, என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் ஓராண்டுகால முறைகேடுகள் தொடர்பான புகார்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுக்க உள்ளோம். வரும் 20-ந் தேதிக்குப் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடன் இந்த ஊழல் முறைகேடு புகார்களை கொடுப்போம்.
பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவை அழித்துதான் வளரவேண்டும் என்கிற நிலை தமிழகத்தில் இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களைப் பெற்று பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்பார் என கூறினார்

