Theme Check

#BIG NEWS:- இனி ஹெல்மெட் இல்லைனா சரக்கு கிடைக்காது,பெட்ரோலும் கிடையாது ..!!

#BIG NEWS:- இனி ஹெல்மெட் இல்லைனா சரக்கு கிடைக்காது,பெட்ரோலும் கிடையாது ..!!

#BIG NEWS:- இனி ஹெல்மெட் இல்லைனா சரக்கு கிடைக்காது,பெட்ரோலும் கிடையாது ..!!
X

நாம் வாழும் ஊரில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேபோல மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிடப்பட்ட அறிக்கையில்;- வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்படமாட்டாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக் கவசங்களை அணிய வேண்டும்.
பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது.
அரசு மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரு சக்கரங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாவிட்டால் பணியாற்ற அனுமதிக்க கூடாது.

இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையினை கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் வரும் 18ம் தேதிக்கு பிறகு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் இத்திட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அனைவரும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Next Story
Share it