Theme Check

#BIG NEWS :- ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!!

#BIG NEWS :- ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!!

#BIG NEWS :- ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!!
X

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர பொருட்களுக்கு இணையாக வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Ration

அதேபோல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

TN-Govt

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நிபந்தனைகளுடன் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், நகர்ப்புற ரேஷன் கடைகளில் ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it