Theme Check

#BIG NEWS:- இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!!

#BIG NEWS:- இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!!

#BIG NEWS:- இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!!
X

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. முன்னதாக, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, வேண்டுகோள் விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 சிறப்பு விமானங்களை இயக்குவதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில்,இந்திய அரசு உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியது. அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.அந்த விமானம் இரவு 12 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.தொடர்ந்து பிப்ரவரி 24 (இன்று) மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேலும் 2 விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1

அதன்படி, ஏர் இந்தியாவின் இரண்டாவது விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து உக்ரைன் சென்றது. ஆனால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியுள்ளதால், அந்நாட்டில் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வான்வெளியையும் உக்ரைன் நாடு மூடியது.
அதனால், நடு வானில் சிக்கிய ஏர் இந்தியா விமானம், மீண்டும் டெல்லி திரும்பிக் கொண்டிருக்கிறது.

1

இதன் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it