ஓபிஎஸ்-ஐ கைவிட்ட பாஜக... ஈபிஎஸ் டெல்லி பயணம் வெற்றியா!?
ஓபிஎஸ்-ஐ கைவிட்ட பாஜக... ஈபிஎஸ் டெல்லி பயணம் வெற்றியா!?

அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது.
ஓ.பி.எஸ்.சிடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தினர், அதை உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்தார். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் இருந்ததால் தற்போது அவர் அரசியலில் அனாதையாகி விட்டார். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என நிரூபிக்கும்வகையில் 75 மாவட்டங்களிலும் வருகிற 25-ந்தேதி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. தேனியில் 26-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. வரும் காலங்களில் துரோகத்திற்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.


