Theme Check

கணவரை கொடூரமாக கொன்று நாடகமாடிய பாஜக நிர்வாகி!!

கணவரை கொடூரமாக கொன்று நாடகமாடிய பாஜக நிர்வாகி!!

கணவரை கொடூரமாக கொன்று நாடகமாடிய பாஜக நிர்வாகி!!
X

சொத்து தகராறில் பா..க பெண் நிர்வாகி கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தரவாட் மாவட்டம் மரேவாடா கிராமத்தை சேர்ந்த ஈரப்பா (45) – ஷோபா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஷோபா தார்வாட் தாலுகா பா.. மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். அவர் தனது கணவரிடம் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

ஆனால் அதற்கு ஈரப்பா மறுத்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவர் ஈரப்பாவை தீர்த்துக்கட்ட ஷோபா முடிவு செய்தார். வீட்டில் இருந்த உருட்டு கட்டைகளை எடுத்து மகள்களுடன் சேர்ந்து ஈரப்பாவை சரமாரியாக தாக்கினார்.

Murder

இதில் பலத்த காயமடைந்த ஈரப்பா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷோபா, போலீஸில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்தில் சிக்கியதாக நாடகமாடி உள்ளார்.

சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் ஷோபா மற்றும் அவரது மகள்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, கணவர் ஈரப்பாவை மகள்களுடன் சேர்த்து கொலை செய்ததை ஷோபா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து தார்வாட் புறநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஷோபா மற்றும் அவரது 2 மகள்களையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it