Theme Check

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கதறி அழுத பாஜக பெண் எம்பி..!

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கதறி அழுத பாஜக பெண் எம்பி..!

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கதறி அழுத பாஜக பெண் எம்பி..!
X

மாநிலங்களவையில் நேற்று (25-ம் தேதி) உடனடி கேள்வி நேரத்தின்போது, பீர் பூம் சம்பவம் குறித்து பாஜக எம்.பி. ரூபா கங்குலி பேசியதாவது: “பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தில் மற்றொரு அரசியல் படுகொலை சம்பவம் இது.

மேற்கு வங்க மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் அது, மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான இடமாக இல்லை.

எனவே, மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன். எங்களுக்கு வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பிறந்தது எங்கள் குற்றமில்லை” என்று கூறியபடி அவர் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தேற்றிக் கொண்டு, “8 பேர் கொல்லப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் வசித்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

இந்த விவகாரத்தை ரூபா கங்குலி பேசத் தொடங்கியதும், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். சிலா் அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். ஆளும் பாஜகவைச் சோ்ந்த உறுப்பினா்களும் பதிலுக்கு கோஷமிட்டனா்.

அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், உறுப்பினா்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவா்கள் தொடா்ந்து கோஷமிட்டனர். இதனால், அவையை 25 நிமிஷங்களுக்கு அவர் ஒத்திவைத்தார்.

Next Story
Share it