Theme Check

திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி!!

திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி!!

திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி!!
X

100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி என் மீது மான நஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.

திமுகவின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும் அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு சரிசமமாக நடத்துகிறது.

நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான என் போராட்டம் தொடரும், துணிவுடன்… மக்கள் துணையுடன் என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தின் சொத்தை அதிகரிக்க துபாய் சென்றுள்ளதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார். அதற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு. சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவின் நடவடிக்கைக்கு அண்ணாமலை பதில் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it