Theme Check

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்..!

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்..!

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்..!
X

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.

4 நாட்கள் பயணமாக இலங்கை செல்லும் அவர், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அங்குள்ள தமிழர் தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சந்தித்து கேட்டறிய உள்ளார்.

மேலும், அங்கு நிலவும் பொருளாதார தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் மக்களின் உடனடி தேவைகள் குறித்தும் அறிய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பயணத்துக்குப் பின் இலங்கையில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Next Story
Share it